இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் 10.03.2020 க்கு முன்னர் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றமைக்கான முன் ஊதிய உயர்வு வழங்குவதற்கு அரசின் அனுமதி வேண்டுதல்
பொதுப்பணி(பி2)த் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை- 9.
கடித எண். 5088/12/2021-2, நாள் 30.03.2021
அனுப்புநர்
டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப.,
அரசு முதன்மைச் செயலாளர்.
பெறுநர்
முதன்மைத் தலைமைப் பொறியாளர்,
நீர்வள ஆதாரத்துறை மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது),
பொதுப்பணித்துறை,
சென்னை - 5.(இ)
அய்யா,
பொருள்: பணியமைப்பு பொதுப்பணித்துறை - தமிழ்நாடு அமைச்சுப் பணித்
தொகுதி இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள்
10.03.2020 க்கு முன்னர் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றமைக்கான
முன் ஊதிய உயர்வு வழங்குவதற்கு அரசின் அனுமதி வேண்டுதல்
குறித்து.
பார்வை:
1. அரசாணை (நிலை) எண். 37, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த
(அவி-IV)த்துறை, நாள் 10.03.2020.
2. அரசாணை (நிலை) எண். 116, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த
(அவி-IV)த்துறை, நாள் 15.10.2020.
3. தங்களின் கடித எண். எஸ்3(3)/41371/2020, நாள் 12.03.2021.
பார்வை ஒன்று மற்றும் இரண்டில் காணும் அரசாணைகள், தமிழ்நாடு அமைச்சுப் பணி
விதிகள் மற்றும் அடிப்படை விதி 31 A-இன் கீழுள்ள விதித்துளிகள் 3 மற்றும் 4-இல் உள்ள
நிபந்தனைகள் ஆகியவற்றின்படி பார்வை மூன்றில் உள்ள தங்களின் கருத்துரு அரசால் நன்கு
ஆய்வு செய்யப்பட்டது.
2. அதன்படி, இக்கடிதத்தின் பிற்சேர்க்கையில் அட்டவணை 1 மற்றும் 2-இல் குறிப்பிட்டுள்ள
நபர்கள் அனைவரும் அரசாணை (நிலை) எண் 37, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த
(அவி-IV)த்துறை, நாள் 10.03.2020 வெளியிடுவதற்கு முன்னரே பொதுப்பணித்துறை சார்நிலை
பணியாளர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 மற்றும் 2-இல் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதாலும்,
தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகள் மற்றும் அடிப்படை விதி 31A-இன் கீழுள்ள விதித்துளிகள்
3 மற்றும் 4 ஆகியவற்றிலுள்ள நிபந்தனைகள் நிறைவடைகின்றன என்பதாலும், மேற்படி நபர்களுக்கு
துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதற்காக வழங்கப்படும் முன் ஊதிய உயர்வி
தனியர்கள் வகித்து வரும் பதவியில் பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் நிறைவு செய்த
பின்னரே, துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றமைக்கான முன் ஊக்க ஊதிய உயர்வினை இயல்பான
நாளிலேயே பெறவும் தகுதியுடையவர்கள் என்ற விவரத்தினையும் தங்களுக்குத் தெரிவித்துக்
கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.
3. மேலும், இக்கடிதத்தின் பிற்சேர்க்கையில் அட்டவணை 1-இல் காணும் 105 நபர்களுக்கு(இளநிலை உதவியாளர் - 57, தட்டச்சர் - 43 மற்றும் உதவியாளர்கள் - 5) பொதுப்பணித்துறைசார்நிலை பணியாளர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 மற்றும் 2-இல் தேர்ச்சி பெற்றமைக்கானமுன் ஊதிய உயர்வினை இயல்பான நாளிலேயே பெறுவதற்கும் மற்றும் அட்டவணை 2-இல்குறிப்பிடப்பட்டுள்ள 128 நபர்களுக்கு (இளநிலை உதவியாளர் - 106 மற்றும் தட்டச்சர் - 22) தற்போது தனியர்கள் வகித்து வரும் பதவியில் பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் நிறைவு செய்த பின்னரே, துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றமைக்கான முன் ஊக்க ஊதிய உயர்வினை இயல்பானநாளிலேயே பெறவும் தகுதியுடையவர்கள் என்றவிவரத்தினையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.
4. இக்கருத்துருவில் பரிசீலிக்கப்படும் தட்டச்சர்களைப் பொறுத்தவரை, அரசு கடித எண்
7358/அவி-4/2005-13, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள் 21.01.2008-இல்
தெரிவித்துள்ளபடி, தனியர்களிடம், உறுதிமொழியினைப் பெற்ற பின்னரே அவர்களுக்கு முன் ஊதிய
உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தங்களைக் கேட்டுக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.
5. இக்கடிதம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையின்
அ.சா.எண்.10278/அவி-IV/2021, நாள் 25.03.2021-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.
DOWNLOAD FILE
Download Timer
No comments:
Post a Comment