கணக்குதேர்வு 10.3.2020 க்கு முன் தேர்ச்சிபெற்று முன்ஊதியஉயர்வு பெறாத அமைச்சுப்பணியாளர்களின் கூடுதல் விபரங்கள் அனுப்பக்கோரி இணைஇயக்குனர் அவர்களின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 23 April 2021

கணக்குதேர்வு 10.3.2020 க்கு முன் தேர்ச்சிபெற்று முன்ஊதியஉயர்வு பெறாத அமைச்சுப்பணியாளர்களின் கூடுதல் விபரங்கள் அனுப்பக்கோரி இணைஇயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

மின்னஞ்சலில் 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் சென்னை-06 
ந.க. எண். 46150/04/81/2020, நாள். 23.04.2021. 

பொருள்: 

பாகம்-1 தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோரியது - கூடுதல் விவரங்கள் கோருவது - தொடர்பாக. 

அரசுக் கடிதம் எண்.6540/154(2)/2021-2, நாள்.20:04.2021 2. சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் ந.க.எண்.46150/அ4/81/2020,நாள்.24.03.2021. 



பார்வை 2ல் காணும் கடிதத்துடன் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்களுக்கு கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்றமைக்கு, முன் ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக பார்வை 1ல் காணும் அரசுக் கடிதத்தில் கீழ்க்காணும் கூடுதல் விவரங்கள் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தனியர்கள் கணக்குத் தேர்வு பாகம்-1 எழுதியதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள், தேர்ச்சி பெற்றதற்கான அரசிதழ் அறிக்கையின் நகல்கள் (TNPSCBulletin Copy) மற்றும் அப்பணியாளர்கள் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1ல் தேர்ச்சி பெற்ற விவரங்கள் பதியப்பட்ட பணிப்பதிவேட்டின் நகல்கள். 

எனவே, மேற்காணும் விவரங்களை அனைத்து பணியாளர்களிடமிருந்து பெற்று அரசுக்கு அனுப்பும் பொருட்டு இரு நகல்களில் 30.04.2021க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 


No comments:

Post a Comment