சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கு மதிப்பெண் எப்படி? - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 14 April 2021

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கு மதிப்பெண் எப்படி?

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கு மதிப்பெண் எப்படி?


சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண் வழங்கும் முறை குறித்து மத்திய கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 
இதையும் படியுங்கள்   
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்திருப்பது, வகுப்பறை செயல்பாட்டின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் தயாரிக்கப்படும். 

அந்த மதிப்பெண் மாணவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், தேர்வு நடத்துவதற்கான உரிய காலம் வரும்போது தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment