ஜூன் 14-ல் என்இஎஸ்டி தேர்வு : மே 20-ல் ஹால் டிக்கெட் வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 7 April 2021

ஜூன் 14-ல் என்இஎஸ்டி தேர்வு : மே 20-ல் ஹால் டிக்கெட் வெளியீடு

தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நுழைவுத் தேர்வு, ஜூன் 14-ம் தேதி நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட் மே 20-ல்வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 


தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள அணுசக்தி அறிவியல் பாடப்பிரிவுகளுக்குத் தேசிய நுழைவுத் தேர்வு (என்இஎஸ்டி) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான என்இஎஸ்டி தேர்வு எழுத விண்ணப்பப்பதிவு https://www.nestexam.in/ என்ற இணையதளத்தில் கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.30 என அறிவிக்கப்பட்டது. 


 இந்நிலையில் என்இஎஸ்டி தேர்வு ஜூன் 14-ம் தேதி நடைபெறும் என்று அத் தேர்வை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட நாட்டின் 90 முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. ஹால்டிக்கெட் மே 20-ம்தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment