+2 Hall Ticket வரும் 23.04.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 17 April 2021

+2 Hall Ticket வரும் 23.04.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்

இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

ந.க.எண்.0697/ஆ1/2021 . நாள்- 04.2021

பொருள்: 

தேர்வுகள் - மேல்நிலை இரண்டாமாண்டு அரசுத் பொதுத் தேர்வு சார்ந்து அறிவுரை வழங்குதல் - தொடர்பாக, 

பார்வை 

16.04.2021 அன்று பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கானொலிக் கூட்ட அறிவுரைகள். 

பார்வையில் காணும் அறிவுரைகளின்படி, மேல்நிலை இரண்டாமாண்டு மே - 2021 பொதுத் தேர்வு தொடர்பாக கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் ! மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

(1) செய்முறைப்பாட தேர்வுகள் இல்லாத (Non Practical Groups Students) மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு 17.04.2021 முதல் STUDY LEAVE விடப்படுகிறது. 

(2) செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்களது செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் முதல் STUDY LEAVE விடப்படுகிறது. (3) 03.05.2021 அன்று நடைபெற வேண்டிய மொழிப்பாடத் தேர்வானது 31.05.2021 அன்று நடைபெறவுள்ளது என்ற விவரத்தினை பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 

(4) செய்முறைத் தேர்வுகளை முறையாக கோவிட் - 19க்கான SOP முறைகளை தவறாது பின்பற்றி எவ்விதப் புகாருக்கும் இடமின்றி நடத்தி முடித்திடல் வேண்டும். 

(5) 19.04.2021 முதல் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து சனிக்கிழமைகளும் அரசு உயர்/ மேல்நிலை/ மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை நாட்கள் ஆகும். (செய்முறைத் தேர்வு நடைபெறும் பள்ளிகளைத் 

(6) மாணவர்களுக்கு மட்டுமே Sludy Holidays. அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் திங்கள் முதல் வெள்ளி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர ) முழு வேலை நாட்கள் ஆகும். 

(7) வரும் 23 ம் தேதி முதல் ஹால் டிக்கட் டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் 26 ம் தேதி அல்லது அதற்கு பின்பு ஒரு வசதியான நாளில் மாணவர்களுக்கு வழங்கலாம். 


(8) பிரிட்ஜ் கோர்ஸ் பாடப்புத்தகங்கள் அனைத்தும் கண்டிப்பாக 20 ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்கி விடல் வேண்டும். 

(9) கருத்தியல் தேர்வின் பொருட்டு தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்தல் வேண்டும். 

(10) கருத்தியல் தேர்வு சார்ந்து தனியாக முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் செயல்முறைகள் பிறப்பிக்கப்படும். 

                                                                                  முதன்மைக் கல்வி அலுவலர் 
                                                                                                இராமநாதபுரம் 

பெறுநர் - 

அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், இராமநாதபுாம் பாவட்டம், ---

 நகல் - மாவட்டக் கல்வி அலுவலர்- இராமநாதபுரம் பரமக்குடி மண்டபம்,



No comments:

Post a Comment