கோவை வேளாண் பல்கலையில், இரண்டு பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. கோவை வேளாண் பல்கலையின் கீழ், இள நிலை பிரிவில், 12 பட்டப்படிப்புகள் கற்பிக்கப் பட்டன. 

கடந்த, 2019ல் மாணவர் சேர்க்கை குறைந்ததால், இரண்டு பட்டப்படிப்புகள் தற் காலிகமாக நிறுத்தப்பட்டன. ஓராண்டுக்குபின், வல்லுனர் குழு ஆய்வுப்படி புதிய பெயர், பாடத் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2020ம் ஆண்டு மாணவர் சேர்க்கையி லும், இப்பட்டப்படிப்புகள் இடம் பெறவில்ல


இப்பட்டப்படிப்பு சேர்க்கையில் மாணவர் கள் ஆர்வம், இப்படிப்பை படிப்பதால் வேலை வாய்ப்பு, தொழில்வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்து, பல்க லைக்கு பரிந்துரை சமர்ப்பித்துள்ளது. துணைவேந்தர் குமாரிடம் கேட்டபோது, "வல்லுனர்% குழு பரிந்துரைப்படி, தற்காலிகமாக மாணவர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்ட, பி.டெக்., உயிர்தகவலியல், பி.டெக்., வேளாண் தகவல் தொழில்நுட்பம் பட்டப்படிப்புகள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன. 


மாணவர்களின் நலன் கரு தியே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களிடம் ஆர்வம் குறைவு, வேலை வாய்ப்பு குறைவு காரணமாகவே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது,'' என்றார். SOURCE NEWS

Post a Comment

Previous Post Next Post

Search here!