போக்குவரத்து ஆவணங்களை ஜூன் 30 வரை புதுப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 9 April 2021

போக்குவரத்து ஆவணங்களை ஜூன் 30 வரை புதுப்பிக்கலாம்

போக்குவரத்து ஆவணங்களை ஜூன் 30 வரை புதுப்பிக்கலாம் - - 


போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் 2020 மார்ச் 24ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் டிரைவிங் லைசென்ஸ், வாகன தகுதிச்சான்று, பர்மிட் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது. 


அதாவது 2020 மார்ச் முதல் ஆறு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில் '2020 பிப். 1 முதல் 2021 மார்ச் 31 வரை காலாவதியாகும் அனைத்து போக்குவரத்து ஆவணங்களும் 2021 ஜூன் 30 வரை செல்லத்தக்கவை' என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 'நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து விடக்கூடாது என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

No comments:

Post a Comment