தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
இடையில் கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் விலை குறைந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 334-க்கும், ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்து 672-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.31-ம், பவுனுக்கு ரூ.248-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து365-க்கும், ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.35 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.
இதே நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் ரூ.35 ஆயிரத்தை கடந்து விடும்.
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் மளமளவென உயருகிறது. நேற்று கிராமுக்கு 80 காசும், கிலோவுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் 71 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.71 ஆயிரத்து 700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ليست هناك تعليقات:
إرسال تعليق