வளிமண்டல சுழற்சியால் 4 நாட்கள் மழை வாய்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 22 April 2021

வளிமண்டல சுழற்சியால் 4 நாட்கள் மழை வாய்ப்பு



சென்னை:

வளிமண்டல சுழற்சி காரணமாக, வரும், 25ம் தேதி வரை, பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், வரும், 25ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்யும்.மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். 

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நேற்று அதிகபட்சமாக, திருச்சியில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், 39; நாமக்கல், சேலம், திருத்தணி, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தியுள்ளது.அதிக புழுக்கம்அதேநேரம், சென்னையில் விமான நிலையம், 36; நுங்கம்பாக்கத்தில், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. மேலும் பெரும்பாலான பகுதிகளில், ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசியதால், அதிக புழுக்கம் காணப்படவில்லை. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் எட்டயபுரம், 3; தர்மபுரி, ஏலகிரி, 2 செ.மீ., மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment