தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை தொழிலாளர் ஆணையர் உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 1 April 2021

தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை தொழிலாளர் ஆணையர் உத்தரவு

தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை தொழிலாளர் ஆணையர் உத்தரவு 



தமிழக தொழிலாளர் ஆணையர் மா.வள்ளலார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 


தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்குப்பதிவு தினமான வருகிற 6-ந் தேதி தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். 


அதேபோன்று கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 


விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளர்கள், பொதுமக்கள் தொழிலாளர் இணை ஆணையர் பா.மாதவன் (செல்போன் எண்.94872-69270), துணை ஆணையர் டி.விமலநாதன் (94425-40984), உதவி ஆணையர்கள் ஓ.ஜானகிராமன் (86103-08192), எம். மணிமேகலை (94446-47125), எஸ்.பி.சாந்தி (73052-80011) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment