உதவி பொறியாளர் தேர்வு: தள்ளி வைக்கிறது வாரியம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 10 April 2021

உதவி பொறியாளர் தேர்வு: தள்ளி வைக்கிறது வாரியம்

உதவி பொறியாளர் பதவிக்கு, 600 பேரை தேர்வு செய்வதற்காக, இம்மாதஇறுதியில் நடத்த இருந்த எழுத்து தேர்வை, கொரோனா தொற்று பரவலால் தள்ளிவைக்க, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. 

தமிழக மின் வாரியம், 'எலக்ட்ரிக்கல்' பிரிவில், 400; 'மெக்கானிக்கல்' பிரிவில், 125; 'சிவில்' பிரிவில், 75 என, மொத்தம், 600 உதவி பொறியாளர் பதவிக்கு ஆட்களை நியமிக்க முடிவு செய்தது.கடந்தாண்டில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 600 இடங்களுக்கு, ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், அந்த ஆண்டில், திட்டமிட்டபடி எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை. அந்த தேர்வை, இம்மாதம், 24, 25; மே, 1, 2ம் தேதிகளில் நடத்த உத்தேசித்துள்ளதாக, மின் வாரியம், பிப்., மாதம் அறிவித்தது.மே, 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை. அதற்கு அடுத்த நாள் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதனால், அந்த இரு நாட்களில் நடத்த இருந்த தேர்வை, வேறு தேதிக்கு மாற்ற, மின் வாரியம் முடிவு செய்தது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையால், பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அரசு, கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. எனவே இம்மாத இறுதியில் நடத்தவிருந்த உதவி பொறியாளர் பதவிக்கான தேர்வை தள்ளிவைக்க, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment