சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வு தள்ளிவைப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 20 April 2021

சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வு தள்ளிவைப்பு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை யு.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. இந்நிலையில், அதிகரித்துவரும் கொரோனா தாக்கத்தை கருத்தில்கொண்டு, 2020-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுகளை யு.பி.எஸ்.இ. தள்ளிவைத்துள்ளது. 


ஒரு சிறப்பு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. நேர்முகத்தேர்வுகளில் பங்கேற்போரும், அதை நடத்துவோரும் நாடு முழுவதும் பயணிக்க வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மாற்றியமைக்கப்படும் தேதிகள் யு.பி.எஸ்.இ. வலைதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 2020-ம் ஆண்டுக்கான வருங்கால வைப்புநிதி பணித் தேர்வு, இ்ந்திய பொருளாதார சேவை, இந்திய புள்ளியியல் சேவை தேர்வு போன்றவையும் மறுஅறிவிப்பு வெளியாகும் வரை தள்ளிவைக்கப்படுகிறது. தேர்வில் பங்கேற்போருக்கு குறைந்தபட்சம்# 15 நாட்களுக்கு முன்னதாக, மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என யு.பி.எஸ்.இ. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment