நாளை நடக்கிறது 'நாட்டா' தேர்வு 


சென்னை, ஏப். 9- '

ஆர்கிடெக்ட்' படிப்பில் சேர விரும்பும் மாண வர்களுக்கான, நாட்டா நுழைவு தேர்வு நாளை நடக்கிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 


அதேபோல, பி.ஆர்க்., என்ற, கட்டட அமைப்பியல் படிப்பில் சேர, மத்திய அரசு அரசு நடத்தும், நடத்தும், நாட்டா நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக் கான நாட்டா நுழைவு தேர்வு, நாடு முழுதும் நாளை நடக்கிறது. 


ஆன்லைன் வாயிலாக நடத்தும் தேர்வில், 200 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இடம் பெறும். முதற்கட்ட தேர்வு நாளையும், இரண்டாம் கட்ட தேர்வு ஜூன், 12ம் தேதியும் நடக்க உள்ளது. மாணவர்கள் இரண்டு தேர்வையும் விரும்பி னால் எழுதலாம் அல்லது ஒரு தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதும். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் உள்ளதோ, அதன்படி மாணவர் சேர்க்கை நுடக்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post

Search here!