அரசு நிர்வாகத்தை இயக்கும்
ஐ.ஏ.எஸ். பணி
இந்திய ஆட்சி பணியின் அதிகாரியே ஐ.ஏ.எஸ். அதிகாரி
என்று அழைக்கப்படுகிறார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்
ஐ.சி.எஸ். அதிகாரி என்று அழைக்கப்பட்டார். இந்தியாசுதந்திரம்
பெற்ற பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று பெயர் மாற்றம்
செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை
நிறுவனங்களில் தலைமை நிர்வாக பதவிகளை ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகள் அலங்கரிக்கின்றனர்.
மத்திய அரசுபணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும்
குடிமை பணி தேர்வு மூலம் இந்திய ஆட்சி பணி(ஐ.ஏ.எஸ்.)
அதிகாரி தேர்வு செய்யப்படுகிறார். ஐ.ஏ.எஸ். தேர்வானது
முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு
என மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில்
கலந்துகொள்ள விரும்புபவர் இந்திய குடிமகனாக இருக்க
வேண்டும். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க
வேண்டும். மேலும் பட்டப்படிப்பு இறுதி தேர்வை எழுத
போகிறவர்கள் அல்லது எழுதி முடித்து தேர்வு முடிவுகளுக்கு
காத்திருப்பவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதலாம்.
குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆகும். இந்த தேர்வை
பொதுப்பிரிவினர் 6 முறை எழுத முடியும்.
மற்றபிரிவினர்களுக்கு
தளர்வு உண்டு. ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பணித்தன்மை என்பது
பன்முகத்தன்மை வாய்ந்தது. மேலும் சவால் மிகுந்தது.
உள்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ்.
அதிகாரிதான், ஐ.பி.எஸ். அதிகாரிகளைவழிநடத்தும் பொறுப்பை
வகிக்கிறார்.
நிதித்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும்
ஐ.ஏ.எஸ். அதிகாரிதான், அரசின் அனைத்து நிதி
செயல்பாடுகளுக்கும் தலைவர் ஆவார். சுருக்கமாக சொன்னால்,
ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு
நேரடியாக உதவக்கூடியது ஆகும். அந்த பணியில்
ஈடுபடுவோருக்கு பொறுப்புகள் எவ்வளவு அதிகமோ, அந்த
அளவிற்கு சலுகைகளும் அதிகம்
No comments:
Post a Comment