மத்திய அரசின் சிப்பெட் நிறுவனத்தில், பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 


இந்தச் செய்தியையும் படியுங்கள்


மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்) சென்னை கிண்டியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. அந்த வகையில் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் (டிபிடி), பிளாஸ்டிக் வார்ப்புருத் தொழில்நுட்பம் (டிபிஎம்டி) ஆகிய 2 பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 

இந்தச் செய்தியையும் படியுங்கள்


இந்த படிப்புகளில் சேர பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் https://cipet.onlineregistrationform.org/CIPET/ என்ற இணையதளத்தில் ஜூலை 3-வது வாரத்துக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான சிப்பெட் நுழைவுத் தேர்வு ஜூலை இறுதியில் நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் வகுப்புகள் தொடங்கும். 

இந்த பட்டயப் படிப்புகளை நிறைவு செய்தவர்களுக்கு பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்களில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த தகவலை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, விருப்பமுள்ளவர்களை இந்த படிப்புகளில் சேருவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அறிவுறுத்திஉள்ளார்.

Post a Comment

أحدث أقدم

Search here!