யூ-டியூப் வழியே
குடிமைப் பணித் தேர்வு
பயிற்சி: தமிழக அரசு
சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடி
மைப் பணித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்ப
டும் என்று அண்ணா மேலாண்மை நிலையம் அறிவித்துள்
ளது.
இதுகுறித்து, அந்த நிலையத்தின் இயக்குநர் வெ.இறை
யன்பு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கரோனா இரண்டாவது அலை பரவலைக் கருத்தில்
கொண்டு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில்
நேர்முகமாக நடைபெறும் அனைத்து வகையான பயிற்சிக
ளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தடை காரணமாக
பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவர்கள் சொந்த
ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சமூக ஊடகமானயூ-டியூப் வழியே
குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.
AICSCC TN மற்றும் AIM TN ஆகிய யூ-டியூப் குறியீடுகள்
அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பில்
இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வழியே குடிமைப்
பணித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.
தேர்வுக்கான உரிய விடியோக்கள் அதில் பதிவேற்றம்
செய்யப்படும்.
No comments:
Post a Comment