பி.ஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை - ‘நாட்டா’ தேர்வுக்கு தளர்வுகள் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 3 April 2021

பி.ஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை - ‘நாட்டா’ தேர்வுக்கு தளர்வுகள்

பி.ஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை - ‘நாட்டா’ தேர்வுக்கு தளர்வுகள் 


பி.ஆர்க் படிப்புக்கான மாணவர்சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நாட்டா’ நுழைவுத் தேர்வில்தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளநிலை கட்டிடவியல் (பி.ஆர்க்) படிப்புக்கான சேர்க்கை ஜேஇஇ மற்றும் கட்டிடவியலுக்கான தேசியதிறனறிவுத் தேர்வு (‘நாட்டா’)அடிப்படையில் நடத்தப்படுகிறது. 


அதன்படி, இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் 10-ம் வகுப்புக்குப் பிறகு 3 ஆண்டுகள் டிப்ளமோ படித்த மாணவர்கள்குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


இந்நிலையில், கரோனா சூழல் காரணமாக, பி.ஆர்க் சேர்க்கைக்குக் குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் மாற்றம் கொண்டு வர அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி குழுமம் முடிவு செய்தது. அதன்படி 2021-22-ம் கல்விஆண்டுக்கான ஜேஇஇ அடிப்படையில் பி.ஆர்க் சேர்க்கைக்கு பிளஸ் 2-ல் இயற்பியல், வேதியியல், கணித பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இவற்றில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், ஏப்.10 மற்றும்ஜூன் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ‘நாட்டா’ நுழைவுத் தேர்வுக்கும் ஜேஇஇ போலவே தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு http://www.nata.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment