புதுடில்லி:வருகிற 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்   

இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது அதே சமயம் என்.இ.எப்.டி முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை மட்டுமே ஆர்டிஜிஎஸ் முறையில் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. SOURCE NEWS

Post a Comment

Previous Post Next Post

Search here!