காலையில் எழுந்தவுடன் எதிர்காலம் குறித்து சிந்திப்பவரா நீங்கள்? - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 8 April 2021

காலையில் எழுந்தவுடன் எதிர்காலம் குறித்து சிந்திப்பவரா நீங்கள்?

காலையில் எழுந்தவுடன் நீங்கள் அன்றைய வேலைக்கான திட்டங்கள் அல்லது எதிர்காலத் திட்டங்கள் குறித்தோ சிந்திப்பவரா? அப்படியென்றால் உங்களுடைய இலக்கை நீங்கள் எளிதாக எட்ட முடியும். 


காலையில் எழுந்தவுடன் நம்முடைய உடலும் மனமும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனாலே மாணவர்களை அதிகாலை நேரத்தில் எழுந்து படிக்க ஆசிரியர்களும், பெற்றோர்களுடன் அறிவுறுத்துவர். நாட்டில் தலைசிறந்த தலைவர்கள் சாதனையாளர்கள் அனைவரும் அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்கள் என்று சொல்ல கேட்டிருப்போம். 

 அதிகாலையில் எழும்போது நம்முடைய மூளை சுறுசுறுப்பாக இயங்கும். எனவே, உங்களுடைய வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க அதிகாலை நேரத்தைப் பயன்படுத்தலாம். அதிகாலையில் எழும் ஒருவர் உடளவில் ஆரோக்கியமாகவும் திறமையாகவும் இருக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. 

 அதேபோன்று காலையில் எழுந்து ஒருவர் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தால் அன்றைய தினம் உங்கள் வேலை சிறப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்காலத்தில் தங்கள் இலக்கினை அடைய முடியும் என்றும் புதிய ஆய்வு கூறுகிறது. புளோரிடா பல்கலைக்கழகத்தின் வாரிங்டன் காலேஜ் ஆப் பிசினஸ் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர் இதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளார். 

அதிகாலை நேரத்தில் நாம் முக்கியத் திட்டங்களை வகுப்பது, எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது நல்ல பலனைத் தரும், உதாரணமாக காலையில் எழுந்தவுடன் காஃபி குடிக்கும்போது அந்த சில நிமிடங்களில் உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியைப் பற்றி நீங்கள் சிந்தித்தால் உங்களுடைய ஒவ்வொரு நாள் வேலையும் எளிதாக அதேநேரத்தில் பயனுள்ளதாக முடியும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஒருவர் காலையில் எழுந்து எதிர்காலத்துக்கான திட்டங்களை சிந்திப்பவர்கள் வேலையில் அதிக ஈடுபாடு காட்டியதும், துல்லியமாக வேலையை முடித்ததும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காலையில் எழுந்தவுடன் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இதுவரை உங்கள் வாழ்வில் பெருமைமிக்க தலைமைத் தருணங்கள் எவை? எதிர்காலத்தில் ஒரு நல்ல தலைவராக என்ன மாதிரியான பண்புகளை வளர்க்க வேண்டும்? உங்களுடைய வாழ்வில் வெற்றி பெற முன்மாதிரியாளராக யாரை தேர்வு செய்ய வேண்டும்? ஒரு நிறுவனத்துக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ தலைவராகும்பட்சத்தில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? 

நீங்கள் சாதிக்க நினைக்கும் துறை என்ன? உங்களிடம் என்னென்ன திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்? குறிப்பிட்ட இலக்கினை அடைய உங்களால் முடியுமா? அவ்வாறு இலக்கினை அடைய வேண்டும் என்றால் என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்? 

அவற்றை எவ்வாறு பெற வேண்டும்? இதுபோன்ற கேள்விகளை காலையில் எழுந்தவுடன் சிந்தித்துப் பார்த்தால் அதற்கான விடைகள் கிடைப்பதுடன் தீவிர செயல்பாட்டிலும் இறங்குவீர்கள். வாழ்வில் வெற்றி பெற அதிகாலையில் எழும் பழக்கத்துடன் அந்த நேரத்தில் எதிர்கால திட்டங்களை தீட்டி செயல்படுத்துங்கள்.

No comments:

Post a Comment