தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் சுயவேலை வாய்ப்பு அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 27 April 2021

தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் சுயவேலை வாய்ப்பு அறிவிப்பு

புதியது தூயது சுகாதாரமானது ஆவின் தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்., தேனி ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை செய்யும் பிரத்தியேக ஆவின் பாலகம் மூலம் சுயவேலை வாய்ப்பு அறிவிப்பு 

ந.க.எண்.463/விற்பனை/2021 நாள் : 23.04.2021 

பொருள் : 

தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் - புதிய பிரத்தியேக ஆவின் பாலகம் நடத்தும் முகவர் நியமனம் செய்தல் - தொடர்பாக. 

தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தேனி ஆவின் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களான பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், பால் பவுடர், பால் பேடா, பனீர், மில்க்ஷேக், ஐஸ்க்ரீம் மற்றும் குல்பி வகைகள் விற்பனை செய்ய பிரத்தியேக ஆவின் பாலகங்கள் (Exclusive Aavin Franchise Par- lours) நடத்தி வர தாலுகா/ வட்டார வாரியாக முகவர்கள் நியமன விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே சொந்தமாக (அ) வாடகை கடை வைத்துள்ள நபர்கள் மற்றும் நகராட்சி நெடுஞ்சாலைத்துறைகளில் இடம் அனுமதி பெற்று பாலகம் நடத்த விருப்பம் உள்ள நபர்களுக்கு தாலுகா / வட்டார வாரியாக முகவர் உரிமம் வழங்கப்படும். 

விருப்பமும் ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய நாள் : 05.05.2021 விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி 

பொது மேலாளர், 
தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், 
D.No.68, W No.23, 
பிளாட் ந.183, காந்திஜி மெயின் ரோடு, 
N.R.T.நகர், தேனி. 
தொலைபேசி எண் : 04546-290176, கைபேசி எண் : 79044 35622 

குறிப்பு : 

விருப்பமுள்ள நபர்களிடம் நேர்காணல் நடத்தி அதிக விற்பனை செய்திட முன்வரும் நபர்களுக்கு முகவர் உரிமம் வழங்க பரிந்துரை செய்யப்படும். தேனி மா.கூ.பா.உ. ஒன்றியத்திற்காக பொது மேலாளர்


No comments:

Post a Comment