கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கூடுதலான டாக்டர்கள், நர்ஸ்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறினார்.
அவரது பேட்டி:
தமிழகத்தில் மார்ச் முதல்,கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டே தொற்று பரவல் இருந்ததால், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்சிஜன் வசதி உள்ளது. மொத்தம் உள்ள படுக்கைகளில், 30 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளன; படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை.
விலை உயர்ந்த, 'ரெம்டெசிவிர்' உள்ளிட்ட மருந்துகளும், தேவையான அளவு கையிருப்பில் உள்ளன.
கடந்தாண்டே ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் பணிகளில் தொடர்கின்றனர். மேலும், கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். டெக்னீஷியன்கள், ஊழியர்களும் போதிய அளவில் உள்ளனர்.இந்திய மருத்துவ சங்கமும், தனியார் செவிலியர் கல்லுாரிகளும், டாக்டர் கள் மற்றும் நர்ஸ்கள் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன; பொதுமக்கள் அச்சம்அடைய தேவையில்லை. அரசு அறிவிப்பின்படி, தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண் டும். அனைவரும் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment