செங்கல்பட்டு- எஸ்.ஆர்.எம்., தமிழ்ப்பேராய விருதுகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ராமசாமி நினைவு - எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின், தமிழ்ப்பேராயம் விருது, 2012 முதல், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.சிறந்த தமிழ் நுால்கள், தமிழ் இதழ், தமிழ் சங்கம், தமிழறிஞர் ஆகிய பிரிவுகளில், இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நுால்களுக்கான விருதுபுதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது - சிறுகதை, புதினம், நாடகம்பாரதியார் கவிதை விருது - கவிதைஅழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - கதை, கவிதை, நாடகம்ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது - மொழிபெயர்ப்பு நுால்அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு விருது - தமிழில் வந்துள்ள அறிவியல் தொழில்நுட்ப நுால்முத்துத்தாண்டவர் தமிழிசை விருது - தமிழிசை சார்ந்த நுால்பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது - ஆய்வு நுால்முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது - தமிழ்சமுதாய மேம்பாடுக்கு செயலாற்றியவர்கள்சிறந்த தமிழ் இதழ்சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது - தமிழ்க்கலை, இலக்கிய பண்பாடு இதழ்சிறந்த தமிழ்ச்சங்கம்தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது - ஓர் அமைப்புக்கு மட்டும்சிறந்த கலைக்குழுஅருணாசலக் கவிராயர் விருது - தமிழிசைக் குழு / நாட்டுப்புறக் கலைக்குழு) சிறந்த தமிழறிஞர்பாரிவேந்தர் பைந்தமிழ் விருது - தமிழ்ப் பேரறிஞராக வாழ்நாள் சாதனையாளர்.
இத்தகவலை, எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனங்களின் தலைவர் பாரிவேந்தர், அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.விண்ணப்பிக்க இதுதான் முகவரிதமிழ்ப் பேராயம் விருதுகளுக்கு, எந்த நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர்களும், மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, செயலர், தமிழ்ப்பேராயம், அறை எண்: 518, ஐந்தாம் தளம், பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடம், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு - 603 203 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், tamilperayam@srmist.edu.in என்ற மின் அஞ்சல்; https;//www.srmist.edu.in/tamilperayam என்ற வலைதளம் மற்றும் 044- - 27417375-/ 76/79 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment