அழகுக்கு அழகு சேர்க்கும் கற்றாழை! - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 14 April 2021

அழகுக்கு அழகு சேர்க்கும் கற்றாழை!

அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் கற்றாழை முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றாழையில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.


 ► வெயில் காலங்களில் சருமத்தைப் பராமரிக்க கற்றாழையை பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இருந்து ஏற்படும் தோல் பாதிப்பை சரிசெய்யலாம். 
இதையும் படியுங்கள்   

 ► அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவ வேண்டும். 
 ► கற்றாழை ஜெல்லை தலையில் முடியின் வேர்க்கால்களில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்கலாம். தலைமுடி வளர்ச்சிக்கு கற்றாழை உதவும். 
இதையும் படியுங்கள்   
 ► கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும். 
 ► கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருக்கள் உள்ளிட்ட சருமக்கோளாறுகளை நீக்கும் தன்மை கற்றாழைக்கு உண்டு. 
 ► கற்றாழையின் சதைப் பகுதியை உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும். 
இதையும் படியுங்கள்   

 ► கண்களின் கீழ் உள்ள சுருக்கங்களைப் போக்க கற்றாழை ஜெல்லை தடவலாம். 
 ► இறுதியாக உடல் சூட்டைக் குறைக்க, முக அழகு கூட, கற்றாழை ஜெல்லுடன் மோர், சிறிது உப்பு சேர்த்து குடித்து வரலாம். வாரத்துக்கு இருமுறை கற்றாழைச் சாறு குடிக்கலாம். 
 ► முகத்திற்கோ அல்லது சாறாக அருந்தோ கற்றாழை ஜெல்லை எடுக்கும்போது, ஜெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவியபிறகே பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment