பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைனில் மட்டுமே தேர்வு உயர்கல்வித் துறை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 21 April 2021

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைனில் மட்டுமே தேர்வு உயர்கல்வித் துறை அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பின்பற்றி வந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு, தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


நோய் பரவல் அதிகரிக்க தொடங்கியதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லூரிக்கல்வி இயக்குனர், உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- 


 உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் பின்வரும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அதன் விவரம் வருமாறு:- 


 * பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். 

 * அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகள் ஆன்லைனில் மட்டும் நடத்தப்படும். 

 * அனைத்து கல்வி பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்களில்^ வகுப்புகள் ஆன்லைனில் மட்டும் நடத்தப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment