100 சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. 

அந்தவகையில் திருமண அழைப்பிதழ் போன்று அச்சிட்டு அதனை தேர்தல் ஆணையம் வீடு வீடாக வழங்கி வருகிறது. அந்த நோட்டீஸ், ‘வாக்களிக்க அழைப்பிதழ்' என்ற தலைப்பில் உள்ளது. 

 அதில், 

‘அன்புடையீர், நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி மாதம் 24-ந் தேதி (6.4.2021 செவ்வாய்க்கிழமை) சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 

‘வாக்களிக்கும் வைபோகம்' 



தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுவதால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தாங்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து சுற்றம் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கிறோம். 

வாருங்கள்...வாக்களிப்போம். 

தங்கள் அன்புள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!