சிப்பெட் நிறுவனத்தில் டிபிஎம்டி, டிபிடி பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் 


சென்னையில் உள்ள மத்திய அர சின்'சிப்பெட்' நிறுவனத்தில் டிபிஎம்டி,டிபிடிஆகிய இருபட்டயப்படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மத்திய நெகிழிப் பொறியியல், தொழில் நுட்ப நிறுவனத்தில் (சிப்பெட்) இளநிலை, முதுநிலை, பட்டயா, மேம் பட்ட பட்டயம், முதுநிலைப் பட்டயப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிறுவனம் இந்திய அரசின் ரசாயனங்கள்- உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனங்கள் துறை யின்கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டு கால அளவி லான நெகிழித் தொழில்நுட்பம் (Diploma in Plasti cs Technology), நெகிழி வார்ப்புருத் தொழில்நுட்பம் (Diploma in Plastics Mould Technology) ஆகிய இரு பட்டப் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. 

விண்ணப்பப் பதிவு http://cipet.onlineregistrationform.org/cipet என்ற இணையதள முகவரியில் கடந்த ஏப். 13-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஜூலை 3-ஆவது வாரத்துக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் மாணவர் சேர்க் கைக்கான சிப்பெட் தேர்வு ஜூலை இறுதி வாரத் தில் நடைபெறும். 

இதைத் தொடர்ந்து, வகுப்பு கள் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்கும். இவற்றை படித்தவர்களுக்கு முன்னணி பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்களில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதால், இந்தப் படிப்பு கள் குறித்து மாணவர்களுக்குத் தெரியப்படுத்தி, விருப்பமுள்ள மாணவர்களை சேருவதற்கு ஊக்கு விக்க வேண்டும் ^என முதன்மைக் கல்வி அலுவலர்க ளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post

Search here!