கல்லுாரிகளில் என்.சி.சி., பயிற்சியை எலக்டிவ் பாடமாக சேர்க்க உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

Sunday, 25 April 2021

கல்லுாரிகளில் என்.சி.சி., பயிற்சியை எலக்டிவ் பாடமாக சேர்க்க உத்தரவு

அனைத்து கல்லுாரிகளும் என்.சி.சி., பயிற்சியை எலக்டிவ் பாடமாக சேர்த்துக்கொள்ள, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. 
இந்தச் செய்தியையும் படியுங்கள்


கல்லுாரிகளில் இளநிலை படிக்கும் மாணவர்கள், தான் படிக்கும் துறை தவிர, பிற துறைகளில் விரும்பிய பாடத்தை தேர்வு செய்து, படித்து தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.அவ்வாறு, தேர்ச்சி பெறும் பட்சத்தில், 'சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்' என்ற அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். மூன்றாண்டுகள் முடிக்கையில், குறிப்பிட்ட புள்ளிகள் பெற்றால் மட்டுமே பட்டம் பெற, தகுதியானவர்களாக கருதப்படுவர்.முதுநிலை மாணவர் சேர்க்கையிலும், இப்புள்ளிகளுக்கு முக்கிய பங்குள்ளது. 

இந்தச் செய்தியையும் படியுங்கள்

இந்நிலையில், என்.சி.சி., விளையாட்டு உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, அதனை எலக்டிவ் பாடங்களின் கீழ் சேர்த்து, புள்ளிகள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.ஆனால், பல கல்லுாரிகள் என்.சி.சி., பிரிவை எலக்டிவ் பாடத்தின் கீழ், கொண்டு வராமல் இருப்பதாக, தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன.இந்நிலையில், பல்கலை மானியக்குழு, என்.சி.சி., பயிற்சியையும் எலக்டிவ் பாடமாக சேர்க்க உத்தரவிட்டு, அதற்கான வழிகாட்டுதல்களை கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment