சிறுதானிய வகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த உணவுகளில் ஒன்றானது கம்பு. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்கள் உடலிற்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இப்பொழுது நாம் கம்பு உணவு உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம் .
கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இதனை உண்பவர்களுக்கு இவ்வனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.
கம்பு உணவுகளில் அதிக அளவு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலிற்கு வலுவளித்து ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது.
100 கிராம் கம்பில் கிட்டத்தட்ட 15 கிராம் அளவிற்கு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது.வளரும் குழைந்தைகள் கம்பு உணவினை உண்டு வந்தால் அவர்களின் வளர்ச்சியானது மிகவும் சீராக அமையும்.
கம்பில் மிகவும் அதிக அளவில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களுக்கு இரத்தசோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
எனவே தினமும் 100 கிராம் அளவில் காம்பினை உட்கொண்டு வாருங்கள் உறவுகளே.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் மற்றும் உணவுமுறை காரணமாக உடல் சூடு பிரச்சனையால் அவதி படுகின்றனர். இவர்கள் தினமும் சிறிது அளவு கம்பு கூழ் குடித்து வந்தால் இவர்களின் உடல் சூடானது தனியும். எனவே குளிர்ச்சியான உடலினை பெற கம்பங்கூழினை பருகுங்கள்.
கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது.
இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் எடை குறையும்.எனவே உடல் எடையினை குறைக்க விரும்புவார்கள் கம்பு உணவை தினமும் ஒரு வேளை எடுத்துக் கொள்ளவும்.
கம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.எனவே தினமும் கம்பு உணவினை சாப்பிடுங்கள்.
தவறான உணவு பழக்கங்களின் விளைவாக இன்றைய காலகட்டத்தில் மலசிக்கல் மிகவும் மோசமான பிரச்சனையாக கருதப்படுகின்றது. கம்பில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது.
இதனை நீங்கள் உண்டு வரும் பொழுது உங்களுக்கு மலசிக்கல் போன்ற பிரச்சினை வராமல் முற்றிலுமாக தடுக்கின்றது.
கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால் இதனை உண்ணும்பொழுது உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் காக்க உதவும்.எனவே தினசரி கம்பு உணவை உண்டு வந்தால் நீங்கள் சர்க்கரை வியாதி வராமல் தடுக்கலாம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
No comments:
Post a Comment