முதியோருக்கான முதல் 'ஆன்லைன்' ரேடியோ: அசத்தும் மூத்த குடிமக்கள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 22 April 2021

முதியோருக்கான முதல் 'ஆன்லைன்' ரேடியோ: அசத்தும் மூத்த குடிமக்கள்

'வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் தான்; திறமைக்கு வயது தடை அல்ல' என்பதை, 'தபோவாணி' ஆன்லைன் ரேடியோ குழுவினர் நிரூபித்துள்ளனர். 


 கோவை, மாதம்பட்டியில், 'தபோவன்' எனும், ஓய்வு பெற்றவர்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, 110 குடும்பங்கள் வசித்து வருகின்றன.இவர்கள் அனைவரும், உலகின் பல மூலைகளிலும், பல துறைகளிலும், பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்து வந்துள்ளனர். தங்களின் ஓய்வு காலத்தில் இங்கு வசித்து வருகின்றனர். 


ஓய்வு பெற்றவர்கள் அமைதியாக வசிப்பதற்கு, கோவையில் ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால், இந்த, 'தபோவன்' சற்று மாறுபட்டது.குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்தபோதே, இனிமையான இசை மனதை வருடியது. 10க்கும் மேற்பட்ட முதியவர்கள், ஒன்றாக கூடியிருந்து, ஒவ்வொருவரின் கையிலும், லேப்டாப், கிட்டார், வயலின், மொபைல் போன், ரெக்கார்டர் வைத்து, ஆனந்தமாக பாடல்கள் பாடிக் கொண்டிருந்தனர்.இது குறித்து கேட்டபோது, 'எங்களின் ஆன்லைன் ரேடியோவுக்கு, நிகழ்ச்சியை தயார் செய்து கொண்டிருக்கிறோம்' என, மகிழ்ச்சியுடன் கூறினர்.

No comments:

Post a Comment