தமிழகத்தில் ஒரு வாரத்தில் கத்திரி வெயில் ஆரம்பம் வானிலை ஆய்வு மையம் - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 27 April 2021

தமிழகத்தில் ஒரு வாரத்தில் கத்திரி வெயில் ஆரம்பம் வானிலை ஆய்வு மையம்

மே 4ம் தேதி கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திர காலம் தொடங்க உள்ளது. 


தமிழகத்தில் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்க உள்ளது. 25 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பம் உச்சத்தை தொடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை என்பது மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கி விடும். 


அதில் தொடங்கி சுமார் 6 மாத காலம் தமிழகத்தில் வெயில் இருக்கும். இந்த ஆண்டுக்கான கோடை கால முன்னறிவிப்பு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.


அதன்படி மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மாநிலங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளில் இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கும். சட்டீஸ்கர், ஒடிசா, குஜராத் மகாராஷ்ட்ரா, கோவா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

MUST READ பள்ளி மாணவரின் விவரங்கள் (EMIS தளத்தில்) உள்ளீடு செய்வதற்கான விவரங்களை சேகரிப்பது மற்றும் உள்ளீடு செய்வது யாருடைய பொறுப்பு ?
  தென் மாநிலங்களை பொறுத்தவரையில் தென் மாநிலங்கள் மற்றும் அதன் மத்திய பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை குறைவாக இருக்கும். தென் மாநிலங்களில் இரவு நேர குறைந்த பட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல்நினோ காரணமாக அதிக வெப்பமாக இருக்கும். இதனால், வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தரைப்பகுதிகளில் வெப்பக் காற்று அதிகமாக இருக்கும். இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மே 4ம் தேதி கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திர காலம் தொடங்க உள்ளது. இது 28ம் தேதி வரை அதாவது 25 நாட்கள் நீடிக்கும். அந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இயல்பைவிட கூடுதலாக வெயில் சுட்டெரிக்கும். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் தகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment