பப்பாளி வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம். இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதனை தினந்தோறும் சாப்பிட்டு வருவதன் மூலம் எண்ணற்ற பயன்கள் கிடைக்கின்றன. அதைப் பற்றி இங்குக் காண்போம். மருத்துவப் பயன்கள் : 

 👉 பப்பாளிப் பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். 

 👉 பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். 

 👉 தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். 

 👉 பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளிப் பழத்தை சாப்பிடுபவர்களின் இரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை. 

 👉 பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கவும் பப்பாளி பழம் சாப்பிட்டால் போதும். 

 👉 பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். 

 👉 பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச விஷம் இறங்கும். 

 👉 பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். 👉 அடிவயிற்றுப் பிரச்சனைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. 

 👉 பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!