இந்திய நிர்வாகவியல் ஃபெலோஷிப்: விண்ணப்பங்கள் வரவேற்பு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 11 April 2021

இந்திய நிர்வாகவியல் ஃபெலோஷிப்: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய நிர்வாகவியல் ஃபெலோஷிப்: விண்ணப்பங்கள் வரவேற்பு 


இந்திய நிர்வாகவியல் ஃபெலோஷிப்புக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிதி ஆயோக் மாதிரியில் கர்நாடக திட்டமிடல் துறையின் சார்பில் நிர் வாகவியல் ஃபெலோஷிப் ஆராய்ச்சி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 
இந்தத் திட்டத்தின்கீழ் www.sevasindhu.karnataka.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடலாம். இந்த ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவதற்கு முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்கள் தகுதியானவர்கள். 

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நல்ல யோசனைகளைத் தெரிவிப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்தத் திட்டத்தில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீ லித்து, சிறந்தவற்றை அரசு துறைகள் பயன்படுத்திக் கொள்ளும். 
இது அரசின் திட்டசெயலாக்கங்களை விரைவுபடுத்தும். இந்தத் திட்டத்தைமைசூரில் உள்ள நிர்வாகபயிற்சிமையம் செயல்படுத்தும். திட்டத்தில் பணியாற்ற விரும்புவோர் https://iaf.thenudge.org என்ற இணையதளத்தில் ஏப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங் களை அனுப்பிவைக்கலாம். ஆராய்ச்சிப் பணிகளுக்கான திட்டங் கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்க ளுக்கு iaf@thenudge.org, chayakd@gmail.com, aceokea@k arnataka.gov.in என்ற மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment