அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவசநீட் பயற்சி வகுப்பு ஆன்லைனில் நேற்று முதல் துவங்கியது.
கொரோனா பரவலால், 'நீட்' பயிற்சி வகுப்புகள் கடந்த நவ., 9 முதல் ஜன., 12 வரை இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் ஆன்லைனில் நடத்தப்பட்டது.பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால், பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பொதுத்தேர்வு முடிந்ததும், ஜூன்முதல் நேரடி முறையில் 'நீட்' பயிற்சி நடத்த கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.
தற்போது தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் ஆன்லைன் 'நீட்' பயிற்சி வகுப்புகளை தொடர உத்தரவிட்டுள்ளது. நேற்று முதல் வகுப்புகள் துவங்கின.மாவட்ட 'நீட்' பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், ''பொதுத்தேர்வு தள்ளிப்போனதால் மீண்டும் ஆன்லைன் பயிற்சி துவங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், அரசு, உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த, 720 மாணவ, மாணவியர் நீட் பயிற்சி பெற்று வருகின்றனர்.முதல் நாள் என்பதால் குறைந்தளவிலேயே மாணவர்கள் பங்கேற்றனர். அனைத்து மாணவர்களையும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பயிற்சியில் பங்கேற்க ஊக்குவித்து வருகிறோம்,'' என்றார்.
No comments:
Post a Comment