என்.ஐ.டி., மாணவர்கள் சாதனை - EDUNTZ

Latest

Search Here!

Monday, 5 April 2021

என்.ஐ.டி., மாணவர்கள் சாதனை

அகில இந்திய அளவிலான 'கேட்' தேர்வில், திருச்சி என்.ஐ.டி., மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


நாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்து வரும் மாணவர்கள், உதவித்தொகையுடன், உயர் கல்வி படிப்பதற்கும், பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்காகவும், தேசிய அளவில் நுழைவுத் தேர்வான, கேட் நடத்தப்படுகிறது. நடப்பு, 2021ம் ஆண்டுக்கான கேட் தேர்வில் நாடு முழுவதும், 16 ஆயிரத்து, 75 மாணவ - மாணவியர் எழுதினர். 

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படிக்கும் இன்ஜினியரிங் பிரிவு இறுதி ஆண்டு மாணவர்களும் தேர்வில் பங்கேற்றனர். இதில், வேதியியல் இன்ஜினியரிங் துறையில் இறுதி ஆண்டு படிக்கும் சிவன் மேகி என்ற மாணவர், தேசிய அளவில் எட்டாவது இடத்தையும், அனந்தநாராயணன் பொட்டி என்ற மாணவர், 220 இடத்தையும் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

No comments:

Post a Comment