நெட் தோ்வுக்கூட நுழைவு சீட்டு :ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்பு 


சென்னை: 

தேசிய தோ்வு முகமை சாா்பில், வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள நெட் தோ்வுக்கான தோ்வா்களின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 

தோ்வுக்கான ஹால் டிக்கெட் (தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு) ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது. பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். அதன்படி, கடந்த டிசம்பரில் நடைபெற இருந்த நெட் தோ்வு கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

 இதன்பின்பு, நெட் தோ்வு மே 2-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 9-ஆம் தேதி முடிவடைந்தது. தொடா்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கும் காலஅவகாசம் தரப்பட்டது. 

 இந்நிலையில், தோ்வா்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. தொடா்ந்து தோ்வுக்கான ஹால் டிக்கெட் (தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு) ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது. அவற்றை இணையதளத்தில் தோ்வா்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில் அறியலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!