இலவச செந்தமிழ்ப் பயிற்சி வகுப்பு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 11 April 2021

இலவச செந்தமிழ்ப் பயிற்சி வகுப்பு

இலவச செந்தமிழ்ப் பயிற்சி வகுப்பு 

பெங்களூரில் நடத்தப்படும் இலவச செந்தமிழ் பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கர்நாடக தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், கர்நா டக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் ஒத்துழைப்பில் வடலூர் ஸ்ரீஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தின் சார் பில் பெங்களூரு ஸ்ரீராமபுரம், லட்சுமிநாராயணபுரம், 5-ஆவது குறுக்குத்தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் செந்தமிழ் பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறது. 
பயிற்சிகாலம் 3மாதங்கள் நடைபெறும். வெள்ளிக்கிழமை, ஞாயிற் றுக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் மாலை 7 மணி வரை வகுப் புகள் நடைபெறும். தமிழ் மொழியின் அடிப்படையை கற்கவும், திரு அருட்பிரகாச வள்ளலார் வழங்கிய திரு அருட்பா மற்றும் தமிழ் இலக்கியங்களைப் படிக்க நல்ல வாய்ப்பாக அமையும். இந்த பயிற்சி யில் சேர வயது ஒரு தடையல்ல. தமிழ் கற்க ஆர்வம் கொண்ட அனை வரும் பயிற்சியில் முன்பதிவு செய்து இணையலாம். 

பயிற்சிக்கு கட்டணம் இல்லை. பயிற்சியில் சேரும் மாணவர்க ளுக்கு செந்தமிழ் கற்றல் கையேடு, எழுதும் நோட்டு, எழுதுகோல், சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 9141612708, 9986285841,7899192588ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment