ஓய்வூதியர்களுக்கான குறைதீர் முகாம் இணையதளம் வழியாக நடைபெறும் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 20 April 2021

ஓய்வூதியர்களுக்கான குறைதீர் முகாம் இணையதளம் வழியாக நடைபெறும்

நாளை நேரடியாக நடைபெற இருந்த ஓய்வூதியர்களுக்கான குறைதீர் முகாம் இணையதளம் வழியாக நடைபெறும் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தகவல் 


சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் பிரனித் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் சார்பில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர் முகாமை, சென்னை ராயப்பேட்டை மண்டல அலுவலகத்தில் 21-ந் தேதி (நாளை) நேரடியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. 


கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த முகாமை இணையதளம் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை இணையதளம் மூலம் சமர்ப்பிக்க சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


ஓய்வூதியதாரர்களின் குறைகள் 21-ந் தேதி (நாளை) மதியம் 2.30 மணிக்கு இணையதள வழியாக நடைபெறும் குறைதீர் முகாமின்போது தீர்த்து வைக்கப்படும். இணையதள வழியாக நடைபெறும் குறைதீர் முகாமிற்கான ‘லிங்க்' ஓய்வூதியதாரர்களின் இ-மெயில் மற்றும் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே நேரில் மனு அளித்தவர்களுக்கு தபால் மூலம் பதில் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment