பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், தகுதி அடிப்படையில் பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை, பொதுப்பிரிவில்# சேர்க்காமல், இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்த்தது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. பணியாளர் நியமனத்தில் சமூகநீதியை நிலைநிறுத்தக்கூடிய இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
MOST READ தமிழகத்தில் இன்றைய (19.04.2021) கொரோனா பாதித்தோர் நிலவரம் (மாவட்ட வாரியாக) Media Bulletin (PDF)
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும்.
தமிழ், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களில் என மொத்தம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், இந்த பாடங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும். எம்.பி.சி. வகுப்பினர் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு சமூகநீதி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق