ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் சிறிது வேக வைத்த சோளத்தை சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
முள்ளங்கி, காலிஃபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்கி வந்தால், அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். அல்லது சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.
இதையும் படியுங்கள்
அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
தயிர் பச்சடி, சாலட் செய்யும்போது, தேங்காய் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்க வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.
இதையும் படியுங்கள்
தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.
துவையல் அரைக்கும் போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். மிளகு கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது.
துவரம்பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
இதையும் படியுங்கள்
காய்கறிகள் வாடிப் போய் விட்டால் கவலை வேண்டாம். பிரிஜ்ஜிலிருந்து ஜில்லென்ற தண்ணீரை எடுத்து, அதில், சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த தண்ணீரில் வாடிய காய்கறிகளை 15 நிமிடம் போட்டு வைத்தால் காய்கறிகள் மீண்டும் பிரஷ்ஷாகிவிடும்.
No comments:
Post a Comment