அரசு ஊழியர்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய வீட்டு கடனை, வீடு கட்டுவதற்கான முன்பண திட்டத்துக்கு மாற்ற, சில கூடுதல் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், அரசு ஊழியர்கள் வீடு வாங்க, வீட்டுக்கடன் முன்பணம் வழங்கப்படுகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு, 40 லட்சம் ரூபாயும், அகில இந்திய பணி அதிகாரிகளுக்கு, 60 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில், அரசு ஊழியர்கள் பெற்ற வீட்டுக் கடன்களை, வீடு கட்டும் முன்பணம் திட்டத்துக்கு மாற்ற அனுமதி வழங்கப் பட்டு உள்ளது.
இதற்கான விதிமுறைகள் இடம் பெற்ற அரசாணை, பிப்., 2ல் வெளியிடப்பட்டது.
இதில், சில கூடுதல் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, வங்கிகளில் வாங்கிய வீட்டுக் கடனை, முன்பண திட்டத்துக்கு மாற்றும் போது ஒப்புதல் வழங்கும் அதிகாரிகள், சில குறிப்பிட்ட விஷயங்களில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதாவது, சம்பந்தப்பட்ட வீட்டு கடன் முழுமையாக வீடு வாங்க அல்லது கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
அரசு வழங்கும் முன்பண தொகைக்கு, உரிய அளவில் தான், நிலுவை இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள், வங்கி, நிதி நிறுவனங்களில் வீட்டு கடன் பெற்ற போது, வீடு கட்டும் முன்பணம் சலுகை பெற தகுதி உடையவராக இருக்க வேண்டும். இது போன்ற சில விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.இது குறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் டி.கார்த்திகேயன், அனைத்து துறைகளுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.
No comments:
Post a Comment