கரோனா பரவலால் அஞ்சல் நிலையங்களில் ஆதார் சேவைக்கு கட்டுப்பாடு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 27 April 2021

கரோனா பரவலால் அஞ்சல் நிலையங்களில் ஆதார் சேவைக்கு கட்டுப்பாடு

கரோனா பரவலால் அஞ்சல் நிலையங்களில் ஆதார் சேவைக்கு கட்டுப்பாடு

 சென்னை: 

கரோனா பரவல் காரணமாக, அஞ்சல் நிலையங்களில் ஆதார் பதிவு, திருத்தம் போன்ற சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை அஞ்சல் துறை விதித்துள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: அஞ்சல் நிலையங்களில் ஆதார் பதிவு, திருத்தம் போன்ற சேவைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. 


இதன்படி, கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களில் ஆதார் பதிவு, திருத்தம் போன்ற சேவைக்காக கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அங்கு நிலவும் சூழ்நிலைக்கேற்ப ஆதார் சேர்க்கை, திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆதார் பதிவு, திருத்தம் போன்றவற்றுக்கு பயோமெட்ரிக் கருவி பயன்படுத்தப்படும் என்பதால், அதை கிருமிநாசினியால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கரோனா தொற்றின் தீவிரத்தை பொறுத்து, பொது இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் முடிவு செய்யலாம். 


அஞ்சலகங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை முறையாக பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துவதோடு, அதை கண்காணிக்கவும் வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment