பி.எட்., முடித்த மாணவர்களுக்கான பட்ட சான்றிதழ்களை, பல்கலையில் பெற்றுக் கொள்ள, கல்லுாரி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் நடத்தப் படுகின்றன. இந்த கல்லுாரிகள், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் அங்கீகாரமும், பல்கலையின் இணைப்பு அந்தஸ்தையும் பெற்று, தமிழகம் முழுவதும், 700 கல்வியியல் கல்லுாரிகள் செயல் படுகின்றன.
அவற்றில் படிக்கும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட, பி.எட்., - எம்.எட்., மாணவர்களுக்கு மார்ச், 2019ல் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் முடிந்து, தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப் பட்டு விட்டன.
இந்நிலையில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்ட சான்றிதழ்கள் வினியோகத்தை, பல்கலை நிர்வாகம் துவங்கியுள்ளது.
ஒவ்வொரு கல்லுாரியும், தங்கள் நிர்வாகத்தின், அங்கீகார கடிதம் பெற்ற பேராசிரியர் அல்லது அலுவலரை, சென்னையில் உள்ள பல்கலை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, பட்ட சான்றிதழ்களை பெற்று செல்லும்படி, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment