கிரசென்ட் உயர்கல்வி நிறுவனத்துக்கு
அகில இந்திய அளவில் சிறப்பிடம்
தாம்பரம், ஏப். 14:
அகில இந்திய அளவில் சிறந்த தொழில்நுட்பக்
கல்வி நிறுவன வரிசையில் வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான்
உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 5-ஆவது இடத்தைப் பெற்
றுள்ளது.
டேட்டா கொஸ்ட் ஆங்கில தகவல் தொழில்நுட்பப் பத்தி
ரிகை அகில இந்திய அளவில் சிறந்து விளங்கும் உயர்தொழில்நுட்
பக் கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தித் தேர்வு செய்துள்
ளது.
அகில இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் உயர்தொழில்
நுட்பக் கல்வி நிறுவனத் தரவரிசைப்பட்டியலில் கான்பூர் ஐ.ஐ.டி.
முதலிடத்தையும், ஹைதராபாத் ஐ.ஐ.ஐ.டி. 2-ஆம் இடத்தையும்,
நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 3- ஆவது
இடத்தையும், தில்லி இந்திர பிரஸ்தா அறிவியல் தொழில்நுட்பக்
கல்லூரி 4-ஆவது இடத்தையும், வண்டலூர் பி.எஸ். அப்துர் ரகு
மான் கிரசென்ட் உயர் கல்வி நிறுவனம் 5-ஆவது இடத்தையும்
பெற்றுள்ளன.
அகில இந்திய அளவில் சிறந்த தனியார் உயர்கல்வி நிறுவனத்
தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தையும், தென்னிந்திய அளவி
லான அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனத் தர வரிசைப்பட்டிய
லில் 2-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து துணை வேந்தர் ஏ.பீர்முகமது செய்தியாளர்
களிடம் பேசுகையில், 'மாணவர்கள் ஆசிரியர்கள், கல்வி நிறுவ
னம், பெற்றோர் ஆகிய அனைவருக்கும் இந்த சாதனையில் பங்
குண்டு” என்றார்.
No comments:
Post a Comment