ஆராய்ச்சி அறிஞர்கள் தினம் ‘ஆன்லைன்' முறையில் நடத்தப்படும்
சென்னை ஐ.ஐ.டி. அறிவிப்பு
கல்வி சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி அறிஞர்கள் தினத்தை சென்னை ஐ.ஐ.டி. கொண்டாடி வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், 9-வது ஆராய்ச்சி அறிஞர்கள் தினத்தை ஏப்ரல் 2-ந்தேதியில் இருந்து 4-ந்தேதி வரை ‘ஆன்லைன்' மூலமாக நடத்தப்படும் என்று சென்னை ஐ.ஐ.டி. அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சி திருவிழா முழுவதுமாக ‘ஆன்லைன்' முறையில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள ஆராய்ச்சி திருவிழாவில், முக்கிய பிரமுகர்கள் பேசும் கருத்தரங்கு, போட்டிகள் மற்றும் ஆராய்ச்சி கண்காட்சிக்கான பயிலரங்கம் என 40 வகையான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. டீன் (கல்வி சார்ந்த ஆராய்ச்சி) பேராசிரியர் அசோக் குமார் மிஸ்ரா கூறுகையில், " சென்னை ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி, தொடர்ந்து ஆராய்ச்சியாளர்களால் வளர்க்கப்படுகிறது. ஆராய்ச்சி அறிஞர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பயிற்சியாளர்கள் இடையே அறிவாற்றலை பகிர்வதற்கான தலமாக ஆராய்ச்சி அறிஞர்கள் தினம் திகழ்கிறது" என்றார்
No comments:
Post a Comment