ராணுவத்துக்கான பொது நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 20 April 2021

ராணுவத்துக்கான பொது நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு

சென்னையில் வரும் 25-ந்தேதி நடக்கவிருந்த ராணுவத்துக்கான பொது நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு ஆள்சேர்ப்பு தலைமையகம் அறிவிப்பு 


இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம், செவிலிய உதவியாளர், எழுத்தர் உள்பட 6 பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம், கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 


அதில், கடலுார், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி# மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விண்ணப்பித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 


அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை முகாம் நடந்தது. அதில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வரும் 25-ந்தேதி சென்னை மாநிலக் கல்லுாரியில் பொது நுழைவுத்தேர்வு நடைபெற இருந்தது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகிறது. 

தேர்வு நடைபெறும் புதிய தேதி, http://www.joinindianarmy.nic.in என்ற ராணுவ இணையதளத்தில் அறிவிக்கப்படும். புதிய தேதி அறிவிப்புக்குப் பின், சென்னையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர்கள் நேரில் வந்து, தேர்வு எழுதுவதற்கான புதிய அனுமதி அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment