CBSE News: உங்க மதிப்பெண் அட்டையில் ‘C’ குறியீடு வருகிறதா? காரணம் இதுதான்!
பிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு செய்முறைத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலில் ’C’ குறியீடு இடம்பெற்றிருந்தால் மாணவர்கள் அது குறித்து கவலைப்பட தேவையில்லை. ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வெளியிடப்படும் மதிப்பெண் பட்டியலில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ’C’ குறியீடு வழங்கப்படும்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு செய்முறைத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலில் ’C’ குறியீடு இடம்பெற்றிருந்தால் மாணவர்கள் அது குறித்து கவலைப்பட தேவையில்லை.
மேலும், இது உங்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற அர்த்தமுமில்லை. எதற்காக ’C’ குறியீடு என்பதை தற்போது பார்ப்போம்.
சமீபத்தில், அனைத்து சிபிஎஸ்இ சார்ந்த கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கும் அனுப்பட்ட சுற்றறிக்கையில் , ஏதேனும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது அவரது குடும்பத்தினர் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதனால் அந்த மாணவர் 2021ஆம் ஆண்டிற்கான செய்முறை தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால், அவரது பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மண்டல சிபிஎஸ்இ அலுவலகங்களிடம் பேசி அந்த குறிப்பிட்ட மாணவர்களுக்கு மறுத்தேர்வு நடத்த வேண்டும்.
இருப்பினும் ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வெளியிடப்படும் மதிப்பெண் பட்டியலில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ’C’ குறியீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் ’C’ குறியீடு பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
சிபிஎஸ்இ செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1, 2021 முதல் ஜூன் 11,2021 வரை நடைபெறும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ எழுத்துத் தேர்வுகள் 4 மே 2021 அன்று முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.
இதனால் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாணவர்களுக்கு அவர்களின் வசதிக்காக சில சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று செய்முறைத் தேர்வுகளை மீண்டும் நடத்துவதாகும்.
இது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் நல்ல முயற்சி ஆகும்.
மேலும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மையங்களை மாற்றுவது குறித்து சிபிஎஸ்இ முன்னதாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மாணவர்கள் ஒரு வேளை தேர்வு மையத்தை மாற்றியிருந்தால் அத்தகைய மாணவரின் மதிப்பெண் பட்டியலில் ‘T’ குறியீடு இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment