DGE - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மொழி பாடத்தேர்வு அட்டவணையில் மாற்றம் – அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 12 April 2021

DGE - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மொழி பாடத்தேர்வு அட்டவணையில் மாற்றம் – அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு

DGE - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மொழி பாடத்தேர்வு அட்டவணையில் மாற்றம் – அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு

அனுப்புநர் 

முனைவர். சி உஷாராணி, எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்டி, 
அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை 600 006. 

பெறுநர் 

செய்தி ஆசிரியர், 
அனைத்து ஊடகங்கள். 

ந.க.எண். 025650 /எச்/ 2020 நாள் : 12.04.2021 

ஐயா/அம்மையீர், 

பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மே - 2021 - மொழிப்பாடத்தேர்வு - தேதி மாற்றம் செய்திக்குறிப்பு வெளியிடக் கோருதல். 

2020-2021 - ஆம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 02.05.2021 அன்று நடைபெறுவதால், 03.05.2021 அன்று நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் 31.05.2021 அன்று நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடைபெறும். மேலும் தேர்வுகள் நடைபெறும்பொழுது பின்பற்ற வேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) பின்னர் தெரிவிக்கப்படும். 

இதனை தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தங்களது பத்திரிகையில் / ஊடகத்தில் செய்திக்குறிப்பாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இது செய்திக்குறிப்பு மட்டுமே. 
விளம்பரம் அல்ல. 

ஒம்!- அரசுத் தேர்வுகள் இயக்குநர்


No comments:

Post a Comment