DSE - AWP&B 201-2022 ஆண்டுக்கு திட்டமிட ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன் மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோருதல் - இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 16 April 2021

DSE - AWP&B 201-2022 ஆண்டுக்கு திட்டமிட ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன் மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோருதல் - இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், 
சென்னை-4 நக க 023447 என் 2/82/2021 நான் 1204 2021 

பொருள் 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - AWPAB 201-2022 ஆண்டுக்கு திட்டமிட ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன் மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோருதல் - தொடர்பாக 

பார்வை 

சென்னை-6, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இக்குநரின் கடித நக எண் 1076/ஆ6/சிவில் / ஒபக /2021 நாள் 31.03.2021 

பார்வையில் கண்டுள்ள மாநிலத்திட்ட இயக்குநர் கடிதத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, AWP&B 2021- 2022 ஆண்டுக்கான திட்டமிடலில் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) ) கட்டமைப்பிற்கு தேவையான முன் மொழிவுகள் (Proposals) மத்திய அரசால் கோரப்பட்டுள்ளது, எனவே, AWP&B 2021- 2022 ஆண்டுக்கான ஆசிரிர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு மாவட்டங்களிலிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு தங்கள் நிலையில் ஆய்வு செய்து உரிய குறிப்புரைகள் மற்றும் இணைப்புகளுடன் மத்திய அரசுக்கு முன் மொழிவுகளை (Proposals) அனுப்பிடும் வண்ணம் அறிக்கையினை தயார் செய்து உடன் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு தேர்வு செய்யும் போது மலைப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதியற்ற தொலைதூரப் பகுதிகள் (Remote Areas) முன்னுரிமை அடிப்படையிலும் முன் மொழிவுகளை (Proposals) இணைப்பில் உள்ளவாறு பூர்த்தி செய்து இச்செயல்முறைகள் கிடைத்த அன்றே idssed@nic.in மற்றும் massc.tndseenic.in என்ற மின்னஞல் முகவரிகளுக்கு உரிய படிவத்தில் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இணைப்பு - படிவம் பள்ளிக் கல்வி இயக்குநருக்காக பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.


No comments:

Post a Comment