10-ம் வகுப்பு மாணவர்களுக்கு - மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைக்க நிபுணர் குழு : பள்ளிக்கல்வித் துறை திட்டம் (பத்திரிக்கைச் செய்தி) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக நிபுணர் குழு அமைக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 


கரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழுமையாக கற்பித்தல் பணிகள் நடைபெறவில்லை. அதனால், மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண் கணக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் உயர்கல்விக்கு இந்த மதிப்பெண் அவசியம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

தேர்வுகள் நடைபெறவில்லை 

கடந்த ஆண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இந்த ஆண்டில் அதுபோல தேர்வுகள் எதுவும் நடத்தப்படாததால் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்காக பிரத்யேக நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. கல்வியாளர்கள், ஆசிரியர்களுடன் இந்த குழுவினர் விவாதித்து, மாணவர்கள் நலன் பாதிக்கப்படாதவாறு மதிப்பெண் வழங்குவதற்கு பரிந்துரைகள் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகளை தமிழக அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!