தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் - EDUNTZ

Latest

Search here!

Thursday, 6 May 2021

தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்



கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் மதுரை மண்டலத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் நியமனம் 
கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நியமித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் இடம் பெற்ற அதிகாரிகள் விவரம் வருமாறு:- 

சென்னை நகரத்துக்கு கண்காணிப்பு அதிகாரியாக போலீஸ் ஐ.ஜி. (தலைமையகம்) எச்.எம்.ஜெயராமும், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஐ.ஜி. (பயிற்சியகம்) எம்.சி.சாரங்கனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளடங்கிய மதுரை மண்டல கண்காணிப்பு அதிகாரியாக சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் உள்ளடங்கிய நெல்லை மண்டல கண்காணிப்பு அதிகாரியாக நவீனப்படுத்துதல் பிரிவு ஐ.ஜி. எஸ்.முருகன் ஆகியோரும் நியமிக்கப்படுகிறார்கள். 


இந்த கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த மாவட்டங்களில் கொரோனா கள நிலவரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment